கடலூரில் 171 விசைப்படகு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

Forums Communities Fishermen கடலூரில் 171 விசைப்படகு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #5243

    கடலூரில் பதிவுச் செய்யப்படாத படகுகளைக் கொண்டு மீன் பிடித் தொழில் செய்வதற்காக 171 விசைப் படகு உரிமையாளர்களுக்கு மீன் வளத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    கடலூரில், 45 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு, 254 படகுகள் மீன் வளத்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையும் தாண்டி, அதிக நீளம் உள்ள படகுகள் மற்றும் 120 குதிரை சக்தி திறனுக்கும் அதிகமான படகுகள் என விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட படகுகள் மீன் பிடித் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டு வந்ததாகக் கூறப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, மீன் வளத்துறை அதிகாரிகள் சோதனை செய்தததில் 171 படகுகள் பதிவுச் செய்யப்படாமலிருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு மீன் வளத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இவற்றில் பெரும்பாலான படகுகள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு உள்ளதாக மீன் வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This