Forums › Communities › Farmers › அரிசி, சோளம் போன்ற தானியங்களை பூச்சிகள் தாக்காமல் காப்பது எப்படி?
Tagged: இயற்கை விவசாயம், கருவி, பூச்சி, ப்ரோப் ட்ரப், மருந்து
- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 7 months ago by
Inmathi Editor.
-
AuthorPosts
-
June 22, 2018 at 11:47 am #5241
இந்தியாவில் சேகரித்து வைக்கப்படும் பல டன் தானியங்களில் 2-3 சதவீத தானியங்களை பூச்சிகள் அழிஅழிய்த்துத்து விடுகின்றன.அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட 1300 கோடி என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒரு ஜோடி பூச்சி, ஒரு வருடத்துக்குள் 15,000 பூச்சிகளை உருவாக்குகிறது. இவை வருடத்துக்கு 30 கிலோ அரிசியை நாசம் செய்கிறது. அதேவேளையில் இந்த பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்த வழிகள் இருந்தும் 99 சதவீதம் பேர், பாஸ்பீன் மாத்திரைகளை வைத்து வேதியியல்முறை மூலம் தான் பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றனர்.
நாம் புட்’ஆர்கானிக் ஃபுட்’ என்று காசு கொடுத்து வாங்கும் வகை வகையான தானியங்களை பாஸ்பீன் மாத்திரைகளை வைத்தே பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றனர். அப்படியானால் தானியங்களை அழிக்கும்பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்த வழியே இல்லையா என்று கேட்கலாம்.
இதே கேள்வியை,இன்மதி.காம்-காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பூச்சியல் துறை பேராசிரியர் முனைவர் மோகனிடம் கேட்டோம்.
தானியங்களை சேகரித்து வைக்கும்போது அதில் பூச்சிகள் உருவாகி தானியங்களை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து உண்ணுகின்றன. இதனால் பெரிய அளவில் தானியங்களை சேமித்து வைக்கும்போது இழப்பு ஏற்படுகிறது. இன்றளவும் தானியங்களில் ஏற்படும் பூச்சிகளை கட்டுப்படுத்த ‘பாஸ்பீன்’ என்ற மாத்திரியைத்தான் உபயோகிக்கிறார்கள்.நகரங்களில் இப்போது ‘ஆர்கானிக் ஃபுட்’ என்கிற பெயரில் உரம், பூச்சி மருந்துபோடாமல் வளர்க்கப்பட்ட தானியங்கள் என்ற பெயரில் விற்கப்படுகின்றன. ஆனால் அந்த தானியங்களை எப்படி பூச்சிகள் அண்டாமல் சேமித்து வைக்கிறார்கள்? அவற்றிலும் பாஸ்பீன் மாத்திரைகள் தான் உபயோகப்படுத்தப்படுகின்றன.
அப்படியெனில் இயற்கை முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாதா? என்ற கேள்வி எழும்.எந்த பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தாமல் தானியங்களை பாதுகாக்க முடியும். அதற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் பூச்சியல் துறையில் Probe Trap என்றொரு கருவியைக் கண்டுபிடித்துள்ளோம். இதை சேமித்து வைக்கபப்ட்டுள்ள தானிய மூட்டைகளில் செருகி வைத்தால் அதில் இருக்கும் பூச்சிகள் இந்த கருவியில் விழுந்து விடும். இது பொதுவாக தானியங்களில் பூச்சிகள் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க பயன்படுகிறது.
Insect remover என்ற கருவியை கண்டு உருவாக்கியுள்ளோம். அதனை மூண்ரு அளவுகளிலும் உருவாக்கியுள்ளோம். 3-5 கிலோ தானியங்களை சுத்தப்படுத்தும் சுத்தப்படுத்தும் கருவி. அடுத்து 50கிலோ/ஒரு மணி நேரம் என்ற கொள்ளளவு உள்ள கருவி, அடுத்து, ஒரு ஹெச். பி அளவு கொண்ட மோட்டர் பொருத்தப்பட்ட கருவி. இது பெரிய அளவில் தானியங்களை சேமித்து வைத்திருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி, சோளம், கம்பு, ராகி உள்ளிட்ட தானியங்களை பூச்சி மருந்து உபயோகப்படுத்தாமல் பூச்சிகளைக் கட்டுப்படுத்த இந்த கருவிகளே சிறந்த வழி என்கிறார் முனைவர் மோகன்.
-
This topic was modified 2 years, 7 months ago by
Kalyanaraman M.
-
This topic was modified 2 years, 7 months ago by
-
AuthorPosts
- You must be logged in to reply to this topic.