தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 800 டன் நச்சு கழிவுகள் அகற்றம்

Forums Communities Fishermen தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 800 டன் நச்சு கழிவுகள் அகற்றம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #5125

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து இதுவரை 800 டன் நச்சுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனை தொடர்ந்து  போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், அந்த ஆலை தமிழக அரசால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஆனால், பூட்டப்பட்ட ஆலையில் இருந்து விஷ வாயு வெளியேறுவதாக கிடைத்த தகவலின் அடிப்ப்டையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, நச்சுக் கழிவுகள் வெளியேறுவது உறுதியானது. இதனைத் தொடர்ந்து 800 டன் அளவிலான நச்சுக் கழிவுகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார். அவற்றை 5 கண்டெயினர் லாரிகளில் அப்புறப்படுத்தியதாகவும், 100 சதவீதம் கந்தக அமிலமும் வெளியேற்றப்படும் எனவும் அவர் கூறினார்

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This