பொதுவாகவே, தமிழகத்தை சுற்றியுள்ள ஆழ்கடல் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 30 கி.மீட்டருக்கும் அதிகமாக தென்மேற்கு திசை நோக்கி வீசும். இதுவே, அரபிக்கடல் பகுதியில் உள்ள ஆழ்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீட்டர் வேகத்தில் வட மேற்கு திசை நோக்கி வீசும். இதனால், கடலுக்கு செல்லும் மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் மீன் பிடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
பொதுவாக, கரையோர பகுதிகளில் காற்றின் வேகம் குறைந்த அளவான, மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினாலும், கடலுக்குள் போக போக காற்றின் வேகம் அதிகரிக்கும். அதனால் நாட்டு படகுகளில் மீன் பிடிக்க செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
கடல் அலையின் அளவானது குமரி மாவட்டத்தில் 10 அடி முதல் 12 அடி வரை உயரம் உள்ள அலைகள் எழும்பும். தமிழகத்தின் பிற பகுதிகளில் 2 அடி முதல் 4 அடி வரை உள்ள அலைகள் எழும்பக் கூடும்.
ஆகவே, மீனவர்கள் எச்சரிக்கையுடன் மீன் பிடிக்கக் கேட்டுக் கொள்ளபடுகிறார்கள் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது