பகிரங்கமாக குற்றம்சாட்டும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!

Forums Inmathi News பகிரங்கமாக குற்றம்சாட்டும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #4757
  Kalyanaraman M
  Keymaster

  பாஜக உத்தரவின் பேரில் தான்  தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது – பகிரங்கமாக குற்றம்சாட்டும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!

  மே மாதம் 22ஆம் தேதி,தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

  60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.  இதுகுறித்துஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின்ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் துப்பாக்கிச் சூடு குறித்து இன்மதி  -க்கு  அளித்த சிறப்பு பேட்டி.

  தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு காவல்துறையும் அரசும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மீதும் ஸ்டெர்லைட் எதிர்ப்புசட்ட ஆலோசகர்கள் மீதும் பொய் வழக்குகள் போட்டுக்கொண்டுள்ளனர். குறிப்பாக சம்பவம் நடந்த அன்று தீ வைத்தது உள்ளிட்ட சம்பவங்களில்நாங்கள் தான்  ஈடுபட்டோம் என்று கூறி எங்கள் மீது வீண் பலி சுமத்தி, தொடர்ந்து பொய் வழக்கு போட்டு வருகின்றனர்.

  மேலும், அரசும்  காவல்துறையும் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டு மக்களை துன்புறுத்தி வருகின்றனர். கார்ப்பரேட்டுகளுக்குஆதரவளிக்க வேண்டும் என்கிற அரசின் பொருளாதாரக் கொள்கையின் காரணமாகவும் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பண பலம் காரணமாகவும்தான் அரசு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக நடந்து வருகிறது. காரணம் ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து வெளிப்படையாகவே பெரும்பாலானஅரசியல் கட்சிகள் நன்கொடை வாங்கியுள்ளது.

  மேலும் ஸ்டெர்லைட் ஆலையின் எபகுதியில் இருக்கும் காவல்துறையில் 10 ஆண்டுகாலமாக ஹரிஹரன் என்கிற இன்ஸ்பெக்டர் பணியாற்றிவருகிறார். ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து,ஆட்சியாளர் கள் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதற்கு ஹரிஹரன் இடைத்தரகர் போல்செயல்பட்டு வருகிறார்.

  சம்பவத்தன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தூத்துக்குடியில் இல்லை.  அன்று மதுரை ஐஜியும் நெல்லை டிஐஜியும் தான் பொறுப்பில்இருந்தார்கள் என காவல்துறை கண்காணிப்பாளரே சொல்கிறார். மேலும் மாவட்ட ஆட்சியரும் இல்லை. இருவரும் தூத்துக்குடியில் இல்லாத போதுதுப்பாக்கிசூடு நடந்த போது இல்லை என்றால், அவர்கள் இருவருக்கும் துப்பாக்கிச் சூடு குறித்து முன்கூட்டியே தெரிந்துள்ளது. அதனால் ஏற்படும்பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவே இருவரும் ஊரில் இல்லை என்ற சந்தேகம் எழுகின்றது. ஆனால் துணை வட்டாட்சியர் தான் துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டப்தாக காவல்துறை கூறியது. ஆனால் துணை வட்டாட்சியர்கள்  அதனை மறுத்துள்ளனர்.

  ஆனால் இந்த துப்பாக்கிச் சூடு தூத்துக்குடி மக்களை மட்டும் குறிவைத்து நடத்தப்படவில்லை. ஒட்டுமொத்த தமிழகத்தையும் அச்சுறுத்தவேநடத்தப்பட்டுள்ளது. காரணம், ஜல்லிக்கட்டு  போராட்டத்துக்குப் பிறகு பாஜக அரசு கொண்டு வரும் கார்ப்பரேட் லாப  திட்டங்களுக்கு எதிராக தமிழகமக்கள் போராடி வருகின்றனர். அவர்களையும் அம்மக்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்புகளையும் ஒடுக்கி,  அச்சுறுத்தவே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து யாரும் போராட முன்வர மாட்டார்கள் என்பதுதான் பாஜகவின் திட்டம். அதனால் தான் பாஜகவின்தலைமையிடமிருந்து வந்த உத்தரவினால் தான் இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்க வேண்டும். அது போலத்தான் அவர்களும் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். மேலும் தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிச்சாமியும் பாஜகவின் உத்தரவைக் கேட்டுத்தான் நூறு சதவீதம் செயல்படுகிறார். இதுஇவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து நடத்திய திட்டமிட்ட படுகொலை. அதைத்தான் களத்தில் இருந்த பொதுமக்களும் உறுதி செய்கின்றனர்.

  இந்நிலையில் காவல்துறை தலைமறைவாக இருக்கும் எங்களை அச்சுறுத்த எங்கள் குடும்பத்தாரிடம் அவர்களை தேச பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்வோம் என்று கூறி அச்சுறுத்தியும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. எங்கள் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் தான் தீவைப்பு உள்ளிட்டஅனைத்து வன்முறைகளிலும் ஈடுபட்டது என்று எங்கள் அமைப்பினர் மேல் பொய் வழக்கு போடுவதற்காகவே காவல்துறையினர் செயல்பட்டுவருகின்றனர். ஆனால் சம்பவம் நடந்த மே 22ஆம் தேதி, நான் மடத்தூரில் காவல்துறையினருடன் தான் இருந்தேன். அங்கும் என் பெயர்  ஒரு முதல்தகவல் அறிக்கையில் பதிவாகியுள்ளது. அதேவேளையில் துப்பாக்கிச் சூடு நடந்த போது பனிமயமாதா கோயிலில் நான் இருந்ததாகவும் எப்.ஐ.ஆர்உள்ளது. ஒரேநபர் எப்படி இரு இடங்களில் இருக்க இயலும்?அதேபோல் ரஜினி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஆவேசமாக பேசியதின் பிண்ணனியில் பாஜக உள்ளது. ரஜினி முதலாளித்துவ சிந்தனையும்வலதுசாரி சிந்தனையும் கொண்ட ஒரு நபர். பல்வேறு சமயங்களில் ஆணாதிக்க கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். அவர் முற்போக்காளர்எல்லாம் கிடையாது.  அவருடைய இந்த இயல்பை பாஜகவும் காவல்துறையும் பயன்படுத்திக்கொண்டது. கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்டபோராட்டங்களின்  போதெல்லாம் பேசாத ரஜினி தூத்துக்குடி போராட்டதுக்கு மட்டும் ஏன் பேசினார்? யாரோ சொன்னதை செய்கிறார். அவ்வளவுதான்.

  துப்பாக்கி சூடு குறித்து விசாரிக்க ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த ஆணையம் காவல்துறை தரப்பில் தான் தவறு நடந்ததுஎன்று கூறினால் அரசு அவர்களை தண்டிக்கப் போகிறதா? விசாரணை ஆணையம் சொல்வதை ஏற்பதும் மறுப்பதும் அரசின் விருப்பம் சார்ந்தமுடிவு. விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதே  நடந்த வன்முறையைக் குறித்து யாரும் பேசக் கூடாது என்பதுதான். சட்டசபையில்  யாராவதுகேள்வி எழுப்பினால் விசாரணை ஆணையம் விசாரித்துக்கொண்டு உள்ளது என்று சொல்லி தப்பிவிடலாம் என்பதற்குத்தான் இம்மாதிரியானஆணையங்கள் அமைக்கப்படுகிறது. இதுதான் ஜல்லிக்கட்டு விவகாரத்திலும் நடைபெற்றது. ஆனாலும் நாம் காவல்துறைதான் இந்த வன்முறையில்ஈடுபட்டது என்பதை நிரூபிக்க தகுந்த ஆதாரங்களைத் திரட்டி நீதிமன்றத்தை நாட வேண்டும். அதன்பிறகு நீதிமன்றத்தின் தலையீட்டால் சிபிஐவிசாரணை நடைபெற்றால் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கபடுவர். இப்படித்தான்  வாச்சாத்தி வன்முறையில் நீதி பெறப்பட்டது. அது நடக்கவேண்டும்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This