Forums › Communities › Farmers › விவசாயிகளின் சோகத்தைத் துடைத்த சோலார் மின்பொறி விளக்கு!
- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 7 months ago by
Inmathi Editor.
-
AuthorPosts
-
June 20, 2018 at 7:09 pm #4627
‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது’ என்ற பழமொழி விவசாயம் ஆரம்பித்த காலம் தொட்டே இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் இன்றைய விவசாயிகள் மண்ணில் இடும் உரத்துக்கும் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிக்க அடிக்க பயன்படுத்தும் பூச்சி மருந்துகளுக்கும் அதிக செலவு செய்கின்றனர். கடைசியில், அறுவடை முடிந்து கிடைக்கும் வருவாயில் உரமும் பூச்சி மருந்தும் வாங்கிய கணக்குதான் அதிகமாக இருக்கும்.
அதிக செலவில்லாமல், இயற்கையான முறையிலேயே பூச்சிகளை அழிக்க முடியுமா என்று பல விவசாயிகள் யோசிக்கலாம். அப்படி கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று சந்தோஷப்படுகிறவர்களுக்காகவே இந்தக் கட்டுரை.
புதுச்சேரியைச் சேர்ந்த அப்துல் காதர் எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படித்து ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் மாதம் சில லட்சங்கள் சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தார். ஆனால் அந்த வாழ்க்கையில் அவருக்கு எந்த திருப்தியும் இல்லை. ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்தித்தவருக்கு விவசாயம் தான் திருப்தி தரும் தொழிலாகத் தோன்றியிருக்கிறது.
அதனையடுத்து, அவர் தன் என்ஜினியர் வேலையை விட்டு விட்டு, முழு மனதுடன் விவசாயத்தில் இறங்கினார். அப்போதுதான் எந்த பயிர் வைத்தாலும் அதைத் தாக்கும் பூச்சிகள் அவருக்கு பெரிய சவாலாக இருந்தது. அந்த பூச்சிகளை வேதி மருந்துகள் அடிக்காமல், அதிக பணம் செலவு செய்யாமல் அழிக்க முடிவெடுத்தார்.
அப்போது, விவசாயியாக இருந்த அவருடைய தாத்தா பூச்சிகளை அழிக்க இரவில் வயலுக்கு விளக்கு பந்தம் பிடித்துச் செல்வது நினைவுக்கு வந்தது. உடனே அதை சில மூத்த தொழில்நுட்ப வல்லுநர்களிடம் கூறி ஆலோசனை பெற்று சூரிய ஒளியில் எரியும் ஒரு விளக்குப் பொறியை வடிவமைத்தார்.
துசோதனை முயற்சியாக அந்த விளக்குப் பொறியை தன் வயலில் வைத்துப் பார்த்த போது பூச்சிகள் அழிவதைக் கண்கூடாகக் கண்டார். அவருடைய இந்த எளிய தொழில்நுட்பத்தால் உருவான சோலார் விளக்குப் பொறி குறித்த தகவல் அருகிலுள்ள மற்ற விவசாயிகளுக்கும் பரவத் தொடங்கியது.
அதன் பலனாக சில விவசாயிகள் அப்துல்காதரிடம் நேரடியாக வந்து சோலார் விளக்குப் பொறியை வாங்கினார்கள். சில விவசாயிகளுக்கு இவரே நேரடியாகக் கொண்டு போய் சேர்த்தார். அவர்கள் அதை பயன்படுத்தத் தொடங்கியதும் பூச்சிகள் இயற்கையான முறையில் அழிவதைக் கண்டு வியந்தனர். பூச்சி மருந்துக்காக செலவு செய்யும் காசும் குறைந்ததால் பல விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
அப்துல்காதரின் சோலார் விளக்குகளை நீங்களும் வாங்கிப் பயன்படுத்தி பயன் பெறலாம்.!
-
AuthorPosts
- You must be logged in to reply to this topic.