விவசாயம் என்பது எளிமையான தொழில் அல்ல. ஆனால் எல்லா காலத்துக்குமான தொழில். விவசாயத்தில் ஈடுபட, ஆர்வமும் உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால் அதை லாபகரமான தொழிலாக செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் சித்ரா. சித்ரா சிஏ படித்துவிட்டு, ஒரு பட்டய கணக்காளராக வேலை பார்த்த போதும் விவசாயத்தில் இருந்த ஆர்வத்தால் வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் இறங்கியிருக்கிறார்.
அதுவரை சென்னை மாகரில் வசித்து வந்தவர் காஞ்சிபுரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தோட்டத்துக்குள்ளேயே வீடு கட்டி குடியேறி முழுநேர விவசாயியாக மாறியுள்ளார். தன் கணக்கர் பணியில் கிடைக்காத நிம்மதி, விவசாயத்தில் கிடைப்பதாகக் கூறுகிறார் சித்ரா.
இன்னும் பல அனுபவங்களை, படிப்பினைகளை, இன்மதியின் வேளாண்துறை ஆசிரியர் எம்.ஜெ. பிரபு, தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் கண்ட நேர்காணலில் கூறுகிறார். கேளுங்கள், விவசாயம் குறித்தான உங்கள் பார்வையும் விரிவடையலாம்; தெளிவுறலாம்.