தூத்துக்குடி தப்பாக்கிச் சுடு, 30 நாள்

Forums Inmathi News தூத்துக்குடி தப்பாக்கிச் சுடு, 30 நாள்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #4580

  தூத்துக்குடி படுகொலைகள்- 30ம் நாள் நினைவும் நீதியை நிறுவும் உறுதி ஏற்பும். மனிதநேயம் உடையோர் வருவீர். ஊடக அன்பர்கள் வருவீர்!
  —————————————-
  நாள், இடம், நேரம்: ஜூன் 20, புதன், மாலை 6.30 மணி; கவிக்கோ மன்றம், CIT காலனி, இரண்டாவது ஒழுங்கு சாலை, மயிலாப்பூர்.
  —————————————-
  பங்கேற்கும் தலைவர்கள்.

  அரும் தலைவர் ஐயா திரு. நல்லக்கண்ணு, தி.மு.க சார்பில் திரு. TKS இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் திரு. பீட்டர் அல்போன்ஸ், திரு. தாமோதரன், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வழக்கறிஞர் திரு. பாலு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் எழுச்சித்தமிழர் திரு. தொல் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு தலைவர் திரு. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் தமிழ்நாடு தலைவர் திரு. முத்தரசன், ம.தி.மு.க சார்பில் திரு. மல்லை சத்யா, நீதியரசர் திரு. ஹரி பரந்தாமன், திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் திரு. கலி பூங்குன்றன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் திரு. ஜவஹிருல்லா, SDPI கட்சித் தலைவர் திரு. தெஹலான் பாகவி, அனைத்திந்திய முஸ்லீம் லீக் பொதுச்செயலர் திரு. நிசாமுதீன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் திரு. வாலிதாசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைத்தலைவர் திரு. சிங்கராயர், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் திரு. இனிகோ இருதயராஜ், “நாம்” அமைப்பின் தலைவர் திரு. தேவசகாயம் IAS Rtd, அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலர் தலைவர் திரு. ராஜேந்தர் பிராங்கோ, சென்னைவாழ் தூத்துக்குடி- நெல்லை மக்கள் சார்பில் தோழர் திரு. வீரக்குமார், தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் சார்பில் திரு. பிச்சைமுத்து, பன்னாட்டுத் தமிழ் அமைப்புகளின் சார்பில் திரு. விசாகன், சென்னைவாழ் குமரி மக்கள் சார்பில் திரு. றசல் உள்ளிட்ட மேலும் பலர் பங்கேற்று தூத்துக்குடி அழிவு ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான அமைதி வழிப்போராட்டத்தில் படுகொலையான அப்பாவி மக்களுக்கு நினைவஞ்சலி செய்வர், தூத்துக்குடி மக்களின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்துவர்.
  —————————————-
  நிகழ்ச்சி அமைப்பு

  நாம்-சென்னைவாழ் தூத்துக்குடி, நெல்லை, குமரி மக்கள் ஒருங்கிணையம்.
  —————————————-
  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு

  Fr. ம. ஜெகத் கஸ்பார்.
  —————————————-அனைவரும் வருவீர். இச்செய்தியை பகிர்ந்து உதவிடுவீர். சிறப்பு அழைப்பு ஊடக அன்பர்களுக்கு.
  —————————————- இடைவிடா விழிப்புணர்வே நம் அடிப்படை உரிமைகளுக்கான பாதுகாப்பு. தூத்துக்குடியில் நடந்தது நம் அனைவருக்குமான சவால். ஜனநாயகம், அரசியல் சட்ட அடிப்படையயான ஆட்சி போற்றும் நம் நாட்டில் 17 வயது மாணவி ஸ்னோலின் தலையில் சுட்டு படுகொலை செய்யப்படமுடியுமென்றால் அது மக்களாகிய நமக்கு விடப்படும் வெளிப்படையான அச்சுறுத்தல், மிரட்டல். Stand up. Resist.
  —————————————-

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This