வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள்

Forums Communities Fishermen வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #4508

    குமரி மாவட்டம் ராஜாக்க மங்கலம் துறை, கடியப்பட்டணம் போன்ற மீனவ கிராமங்களைச் சேர்ந்த 8 மீனவர்கள், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் என மொத்தம் 21 மீனவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இரான் நாட்டுக்கு மீன்பிடித் தொழிலுக்குச் சென்றனர். இரான் நாட்டின் நகிதக்கி என்னும் இடத்தில் சவுதி அரேபியாவை சேர்ந்த முகமது சலா என்பவரின் விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றுவந்தனர். கடந்த 6 மாதங்களாக மீன்பிடித் தொழில் செய்ததற்கான சம்பளத்தைப் படகு உரிமையாளர் வழங்கவில்லை எனவும், சரிவர உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே நேற்றையதினம் 21 மீனவர்களும் படகு உரிமையாளரிடம் சம்பளம் கேட்டுள்ளனர். சம்பளம் கொடுக்க மறுத்த படகு உரிமையாளர் மீனவர்களை அவர்கள் தங்கியிருந்த அறையிலிருந்து வெளியேற்றியிருக்கிறார். மேலும் அவர்களது பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்திருக்கிறார் அவர். இதனால் 21 மீனவர்களும் இரானில் நடுரோட்டில் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என தெற்காசிய மீனவர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சர்ச்சில் கூறுகிறார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This