சமூக ஆர்வலர் மேதாபட்கர் இன்று தூத்துக்குடி வந்தார். அங்கு போலீஸாரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , போலீஸார் இரக்கமில்லாமல், மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டுள்ளதாகவும், ஏற்கனவே, இந்தியா முழுவதும் இது போன்ற சம்பவங்களை விசாரிக்க உருவாக்கப்பட்ட விசாரணை கமிஷன்களால் எந்தவித தீர்வு ஏற்படவில்லை என்றும் கூறினார்.
