மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தாகாரத் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார். அவருடன் மத்தியக் குழு உறுப்பினர்கள் பி.சம்பத், யு, வாசுகி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் ஆகியோரும் மடத்தூர், திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தனர். இன்று மாலை, தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டிற்கு காரணமான போலீஸை கண்டித்து கண்டனப் பொதுக் கூட்டம் நடக்கவிருக்கிறது. முன்னதாக, இந்த கண்டனப் பொதுக்கூட்டத்திற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக் கூடும் எனக் காரணம் காட்டி போலீஸார் அனுமதி மறுத்தனர்.இதனைத் தொடர்ந்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை பெஞ்ச், அனுமதி வழங்கி உத்தரவிட்டது.