Journalists association condemns arrest for anti-BJP opinion

Forums Inmathi News Journalists association condemns arrest for anti-BJP opinion

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #4241

    *இணையதள செய்திக்காக பத்திரிகையாளர் நூருல் ஜஹபரை கைது செய்திருப்பதற்கு சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்* தெரிவித்துக்கொள்கிறது.

    முத்துப்பேட்டையில் பாஜக சார்பாக நடக்கவுள்ள உண்ணாவிரதத்தை விமர்சித்து, மாலை முரசு தொலைக்காட்சியில் பணியாற்றிவரும் நூருல் ஜஹபர் இணையதளம் ஒன்றில் எழுதியுள்ளார். இதற்காக முத்துப்பேட்டை காவல்துறையினர்  அவரை கைது செய்துள்ளனர். “போராட்டம் நடத்தும் அனைவரையும் சமூக விரோதிகள், பயங்கரவாதிகள் என விமர்சித்து வந்த பாஜகவினரே, போராட்டம் நடத்துவது பலருக்கு நகைப்பை ஏற்படுத்தியுள்ளது” என்ற பதிவுக்காக காவல்துறை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது.
    <p style=”text-align: center;”>பெண் பத்திரிகையாளர்கள் குறித்த நடிகர் எஸ்.வி.சேகரின் முகநூல் பதிவு கீழ்த்தரமானது என்பதை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் உறுதிசெய்துள்ளது. அவருக்கு முன்பிணை வழங்கவும் மறுத்துவிட்டன. அதன் பிறகும் எஸ்.வி.சேகரை கைது செய்யாத காவல்துறை, *இணையதள செய்திக்காக நூருல் ஜஹபரை கைது செய்திருப்பது கருத்து சுதந்திரத்தின் மீதான ஒடுக்குமுறையே. எனவே எந்த நிபந்தனையும் இன்றி அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்* என சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் (எம்.யு.ஜே) வலியுறுத்துகிறது.</p>

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This