குற்றாலம் பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழையின் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குற்றாலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.