முல்லைப் பெரியாறு அணையில் நீர்க்கசிவு நீர்மட்டத்திற்கு ஏற்ப சரியான அளவிலேயே உள்ளது,’ என, ஆய்வு செய்த குழுவினர் தெரிவித்தனர். முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 127 அடியை எட்டியுள்ளது.
அதனால் மத்திய நீர்ப்பாசன செயற்பொறியாளர் ராஜேஷ் தலைமையிலான கண்காணிப்புக் குழு நேற்று அணையில் ஆய்வு செய்தது.இக்குழு மெயின் அணை, பேபி அணை, ஷட்டர், காலரி உள்ளிட்டவற்றை பார்வையிட்டது. அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்களில், கேரள அதிகாரிகள் கூறிய 6 ஷட்டர்கள் இயக்கி சோதனை செய்யப்பட்டது. அதன்பின் மெயின் அணையில் வெளியேறும் ‘சுவீப்பேஜ்’ தண்ணீரின் அளவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.