கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருவதால் இந்த முறை தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் பிரச்னை இருக்காது என கர்நாடக முதல்வர் கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்வதால் கபினி அணி நிரம்பியுள்ளது. இதனால் அணையிலிருந்து 35,000 கன அடி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை வந்துள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருவதால் இந்த முறை தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் பிரச்னை இருக்காது என கூறியுள்ளார்.