அடுத்த 15 நாட்களுக்கு சென்னையில் வாகன சோதனை தொடரும் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வழிப்பறி, பைக்ரேஸ் மற்றும் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தொடர்ந்து 4வது நாளாக சென்னை கிண்டி, சைதாப்பேட்டை, அடையார், அண்ணா நகர், மெரினா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையினை தீவிரமாக நடத்தியுள்ளனர். இந்நிலையில் துணை ஆணையர்கள் தலைமையில் நடக்கும் வாகன சோதனையை பெருநகர சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் நேற்று ஆய்வு மேற்கொண்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “செயின் பறிப்பு, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்களை கண்காணிக்க சென்னையில் மொத்தம் 150 இடங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக குற்றச்சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனையடுத்து, அடுத்த 15 தினங்களுக்கு இந்த வாகன சோதனை தொடரும்” என்று கூறியுள்ளார்.