தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவ்வப்போது ஆக்கப்பூர்வமான மாற்றங்களை அறிவித்து வருகிறார். இந்நிலையில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் படிப்புக்கு பயிற்சி அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து கூறுகையில், தமிழகத்தில் பொறியியல் படிப்பு முடித்து 1.60 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். 12ஆம் வகுப்பு முடித்தாலே வேலை பெறும் வகையில் அரசு பயிற்சி வழங்கி வருகிறது என தெரிவித்தார்.