சென்னையைச் சேர்ந்த திவ்யா சூர்யதேவரா ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற செவர்லேட் மாடல் கார்களை தயாரிக்கும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் ஆட்டோமொபைல் தலைநகரான டெட்ராய்டில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக சென்னையை சேர்ந்த திவ்யா சூர்யதேவரா(39) நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் பிறந்த திவ்யா, இளநிலை மற்றும் முதுநிலை வணிகவியல் பட்டப்படப்பை சென்னை பல்கலை கழகத்தில் முடித்தார். அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் எம்பிஏ படிப்பதற்காக அமெரிக்க சென்ற திவ்யா, அங்கு பட்டய கணக்காளராகவும், நிதி ஆய்வாளராகவும் பயிற்சி பெற்றவர் ஆவார்.