நீலகிரி விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு

Forums Inmathi News நீலகிரி விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #4084

  நீலகிரி விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கி முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

  நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டம், கேத்தி கிராமம் அருகே இன்று (14.6.2018) காலை உதகையிலிருந்து குன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, மந்தாடா என்ற இடத்திற்கு அருகில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணம் செய்த குன்னூரைச் சேர்ந்த் திரு. மாணிக்கம் என்பவரின் மகன் திரு. பிரபாகரன், உதகையைச் சேர்ந்த திரு ரத்தினம் என்பவரின் மகன் திரு. நந்தகுமார், குன்னூரைச் சேர்ந்த திரு. அன்பழகன் என்பவரின் மகன் திரு. தினேஷ், உதகையைச் சேர்ந்த திரு. சாக்கோலை என்பவரின் மகன் திரு. தருமன், திரு. ஜீவானந்தம் என்பவரின் மனைவி திருமதி சாந்தகுமாரி, பெங்களூருவைச் சேர்ந்த திரு. பவர்லால் என்பவரின் மனைவி திருமதி ஜெயஸ்ரீ ஆகிய ஆறு நபர்கள் சம்பவ இடத்திலேயும்; உதகையைச் சேர்ந்த திரு. அப்துல்ரப் என்பவரின் மனைவி திருமதி அல்மாஸ் என்பவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

  இந்த சாலை விபத்தில் உயிரிழந்த ஏழு நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இந்தத் தகவல் கிடைக்கப்பெற்றவுடன் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு, சிறப்பான சிகிச்சை அளிக்க நீலகிரி மாவட்ட நிருவாகத்திற்கு உத்தரவிட்டேன். எனது உத்தரவின் பேரில், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய் துறையினர், காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைவாக சென்று, மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொண்டனர். காயமடைந்தவர்களை பத்திரமாக மீட்டு, அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து, சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

  இந்த சாலை விபத்தில் உயிரிழந்த ஏழு நபர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This