ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலி.
ஊட்டிக்கு 40 பேரை ஏற்றிக்கொண்டு சுற்றுலா சென்ற பேருந்து குன்னூர் அருகே மந்தாடா என்னும் ஊரைக் கடக்கும்போது நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 9 பேர் மரணம். மேலும் சிலர் பலியாகியிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. சாலையில் இருந்துய் பேருந்து 500 அடி பள்ளத்தில் தடம் புரண்டு விழுந்ததால் அது இரு துண்டுகளாக சிதறி விழுந்துள்ளது. இதனால் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும்.
தீயணைப்பு வீரர்கள் விபத்து நடந்த இடத்துக்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.