சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் மீனவ பெண்களை இழிவுப்படுத்தி ரௌடிகள் காவல்துறை உதவியுடன் அராஜகம்!
காலம்காலமாக மீன் வியாபாரம் செய்து வந்த மீனவ மகளிரை காவல்துறை உதவியுடன் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி முன்னாள் எம்.பி ஜே.எம்.ஆரூண் அடியாட்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயிருக்கும் உடமைக்கும் ரௌடிகளிடமிருந்தும், அவர்களுக்கு உடந்தையாக செயல்படும் சிந்தாதிரிப்பேட்டை காவல்துறை அதிகாரிகளிடமிருந்தும் பாதுகாப்பு வழங்கக்கோரி மீனவ மகளிர் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.