காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கர்நாடகத்தின் கபினி அணையில் நீர்மட்டம் வெகு விரைவாக உயர்ந்து வருகிறது. இதனால் அணையிலிருந்து வினாடிக்கு 1000 கன அடிவீதம் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் தமிழகத்தை இரண்டு நாட்களில் வந்தடையும். ஆனால், இது குறுவை சாகுபடிக்கு உதவி புரியுமா என்பது கேள்விக்குறியே.