சென்னை எழிலகம் வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சார்ந்த அரசு ஊழியர்கள் மூன்றாவது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் உண்ணாவிரதப் போராடட்த்தில் ஈடுபடும் ஊழியர்களை நேரில் சந்தித்தார்.
அப்போது பேசிய தினகரன், கோட்சேக்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது. உண்ணாவிரதம் இருந்து உயிரிழப்பு ஏற்பட்டால் எடப்பாடி அரசு 5 லட்சம் நிதி தரும். அவ்வளவுதான். ஆகையால் போரடடத்தை வாபஸ் பெற்று, உடல் நலத்தை பேணுங்கள் என கூறினார்.