தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட, தமிழக அரசு கொள்கை ரீதியான முடிவெடுத்து அதை அரசாணையாக வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.
நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை மூடுவது குறித்து வைகோ தொடர்ந்த வழக்கு உள்படஇதுதொடர்பாக 15 வழக்குகள் விசாரணைக்கு வந்தன.அப்போது வைகோ தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு தெரிவித்த பதிலுக்கு தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். மேலும், தமிழக அரசு கொள்கை ரீதியான முடிவெடுத்து அதை அரசாணையாக வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.