பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் குறித்து இழிவாகப் பேசிய நடிகர் எஸ்.வீ.சேகர் மீது ஏன் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். ஆனால் இந்த விஷயம் குறித்து சட்டப் பேரவையில் பேச இயலாது. காரணம் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது என சபாநாயகர் தனபால் கூறி, இதுகுறித்து திமுகவினரை பேச அனுமதிக்கவில்லை.இதனால் தங்கள் எதிர்ப்புக்குரலை பதிவு செய்ய திமுக வெளிநடப்பு செய்தது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய எஸ்.வீ.சேகரை கது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு அவரைக் கைது செய்யாமல் உள்ளது என கூறினார்.