Forums › Inmathi › News › மீன் விலை நிர்ணயக் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என பாரம்பரிய மீனவர்கள் கோரிக்கை
- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 10 months ago by
Nandha Kumaran.
-
AuthorPosts
-
June 12, 2018 at 11:37 am #3786
Nandha Kumaran
Participantமீன் விலை நிர்ணயக் கமிட்டி அமைக்க வேண்டும் என பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் சின்னதம்பி விடுத்துள்ள அறிக்கையில்,
60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் முடிந்து வருகின்ற 15 தேதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்கிறார்கள், மீன்பிடி தடைகாலம் முழுவதும் வாழ்வாதாரத்துக்கே சிரமப்பட்டு வந்த மீனவர்கள், கடன் வாங்கி தனது வாழ்வாதாரத்தையும், படகுகளையும் சரிசெய்துள்ளனர். தற்போதைய தடைகாலம் முடிந்த பின் பிடிக்கும் மீன்களால் வரும் வருமானத்தை வைத்து தான் தனது குழந்தைகளின் படிப்பு செலவு, கடன், வாழ்வாதாரம் ஆகியவற்றை மீனவர்கள் மீட்டெடுக்கவேண்டும் ஆனால் மீனவர்களுக்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சுகிறது, மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு தகுந்த விலை கிடைப்பதில்லை, மீனவர்கள் உழைப்பு பலரால் சுரண்டப்படுகிறது…
கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சிண்டிகேட் அமைத்து மீனவர்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள்.
ஏற்கனவே டிசல் விலை ஏற்றத்தால் படகுகளை இயக்கமுடியால் மீனவர்கள் சிரமப்பட்டு வரும் வேளையில், மீனவர்கள் தாங்கள் பிடித்து வரும் மீன்களுக்கு உரிய விலை கிடைப்பைதை உறுதி செய்வது அரசின் கடமை.
மீனவர்களுக்கு தாங்கள் பிடித்துவரும் மீன்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு வழிவகை செய்யவேண்டும்..
அரசு நிறுவனமாகிய MPEDA மூலம் அரசின் ஊக்கத்தொகையாகிய 8% சலுகையாக பெரும் கடல் பொருள் ஏற்றுமதியாளர்கள் மீனவர்களுக்கு அதன் பலனை கொடுப்பதில்லை, மேலும் மீனவர்கள் பிடித்துவரும் இறால், நண்டு போன்ற ஏற்றுமதியாகும் மீன்களுக்கு குறைந்த விலையே கொடுக்கிறார்கள், குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் கடல் பொருள் ஏற்றுமதியாளர்கள் மீனவர்களை தங்களுக்கு உழைத்து போடும் கொத்தடிமைகளாகவே வைத்துள்ளார்கள்..
இவர்கள் அரசின் சட்டதிட்டத்தை மதிப்பதில்லை எனவே அரசு கடுமையான நடவடிக்கைகள் இவர்கள் மீது எடுக்கவேண்டும் ..
எனவே அரசு கடல்பொருள் ஏற்றுமதியாளர் பிரதிநிதிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் உள்ளடக்கிய MPEDA தலைமையிலான மீன் விலை நிர்ணய கமிட்டி அமைத்து தரவேண்டும்…
MPDEA மூலம் தான் ஏற்றுமதியாளர்கள் கடல் பொருட்களை ஏற்றுமதி செய்யமுடியும், எனவே MPEDA தலைமையில் மீன்விலை நிர்ணய கமிட்டி அமைக்கும் பட்சத்தில் ஏற்றுமதியாளர்களின் சிண்டிகேட் முறை தவிர்க்கப்பட்டு மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு நல்ல விலை கிடைக்கும். எனவே மீன் விலை நிர்ணயக் கமிட்டி ஒன்றை அமைக்க வேண்டும் என பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சின்னதம்பி கூறியுள்ளார் -
AuthorPosts
- You must be logged in to reply to this topic.