தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பத்திரிகையாளர்கள் அவரது இல்லத்தில் சந்தித்தனர். அச்சந்திப்பில் பத்திரிக்கையார்களின் நலனுக்காவும் பாதுகாப்புக்காகவும் கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தியும் பல கோரிக்கைகள் வைகக்ப்பட்டன. மேலும், புதிய தலைமுறை ஊடக வியலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை திரும்பப் பெறும் படி வலியுறுத்தப்பட்டது. முதல்வர் ஆவண செய்வதாக கூறினார். இச்சந்திப்பின்போது, செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உடன் இருந்தார்.