வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில் காற்றின் வேகம் 45 முதல் 55 கிலோமீட்டர்கள் வரை இருக்கும் என்பதால் வட தமிழகப் பகுதியை சேர்ந்த கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென் தமிழகத்தில் கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்குமென்பதால் எச்சரிக்கையுடன் மீன் பிடிக்க செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.