பத்திரிகை சுதந்திரத்தை அரசு மதிக்கிறது – புதியதலை முறை தொலைக்காட்சி மீதான வழக்குப் பதிவு குறித்து முதல்வர் பதில்

Forums Communities Chennai பத்திரிகை சுதந்திரத்தை அரசு மதிக்கிறது – புதியதலை முறை தொலைக்காட்சி மீதான வழக்குப் பதிவு குறித்து முதல்வர் பதில்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3767
    Nandha Kumaran
    Participant

    புதிய தலைமுறை தொலைக்காட்சி கோவையில் விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. அப்போது அதில் பங்குபெற்ற இயக்குநர் அமீர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதனையடுத்து, புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகம், செய்தியாளர் மற்றும் அமீர் மீது கோவை பீளமேடு காவல்நிலையத்தில் பாஜக மற்றும் அதன் துணை அமைப்பைச் சேர்ந்தவர்கள்  புகார் அளித்தனர். இந்நிலையில் காவல்துறை இயக்குநர் அமீர், புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகம் மற்றும் செய்தியாளர் மீது வழக்குப்  பதிவு செய்தது.

    இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் இதுகுறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்படுவதாக கூறினார். மேலும் அவர்கள்  மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், ஜெயலலிதாவின் அரசு பத்திரிகை சுதந்திரத்தை எப்போதும் மதிக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியது போல் யார் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுச் செய்யப்படவில்லை. அதேவேளையில் ஊடகங்களும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என கூறினார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This