மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சௌபா என்கிற சௌந்திரபாண்டியன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணம் அடைந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு, அவரது மகன் லிபினை கொன்றகொன்றதாக் கூறப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் இருந்த அவருக்கு சர்க்கரை நோயால் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் உடல்நிலை மோசமடைந்ததால் மரணம் அடைந்தார். இவர் எழுதிய சீவலப்பேரி பாண்டி தொடர் பரபரப்பாக பேசப்பட்டது.
பத்திரிகையாளாரக பணியாற்றிய போது, உசிலம்பட்டி பகுதியில் நடைபெற்ற பெண் சிசுக்கொலை குறித்து வெளியுலகுக்கு தெரியும் வண்ணம் எழுதினார். அதனையடுத்தே மறைந்த ஜெயலலிதாவின் அரசு, தொட்டில் குழந்தைகள் திட்டத்தைக் கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.