காற்றின் வேகம் : கன்னியாகுமரியில் மணிக்கு 27 முதல் கி.மீட்டர்கள் முதல் 38 கி.மீட்டர்கள் வேகத்தில் மேற்கு நோக்கி வீசும். ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 35 கிலோமீட்டர் முதல் 52 கி.மீட்டர்கள் வரை இருக்கும். நாகை, உள்ளிட்ட கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 22 கி.மீட்டர்கள் முதல் 32 கி.மீட்டர்கள் வேகத்திலும் சென்னையில் 18 முதல் 26 கிலோமீட்டர் தென் மேற்கிலிருந்து மேற்கு திசை நோக்கி வீசும்.
கடல் அலை : கன்னியாகுமரியில் 8 அடி முதல் 12 அடி உயரத்திலும், ராமநாதபுரம், சென்னை, கடலூர், நாகை, உள்ளிட்ட கடலோர பகுதிகளில் 2 அடி முதல் 4 அடி உயரத்திலும் கடல் அலைகள் எழும்பக்கூடும்.
கடல் நீரோட்டம் : சென்னையில் மணிக்கு 1.4 கி.மீட்டர் வேகத்தில் தெற்கு நோக்கியும், நாகையில் 1.2 கி.மீட்டர் வேகத்தில் தென்கிழக்கு நோக்கியும், ராமநாதபரத்தில் 0.6 கிலோ.மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கியும், குமரியில் 0.3கி.மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கியும் இருக்கும்.
கடல்மட்ட வெப்ப நிலை : 26 முதல் 30 டிகிரி செல்ஸியஸாக இருக்கும்.