தூத்துக்குடியில் போலீஸ் அடக்குமுறை: பள்ளி மாணவர், இரு தொழிலாளிகள் கடத்திக் கைது !
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடும் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனது ஊர் ஆரியப்பட்டி. இந்த கிராமத்திற்கு அருகே உள்ள முண்டுவேலன்பட்டியில் தோழர் கோட்டை என்பவர் இரு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். தற்போது பள்ளியில் படித்திக் கொண்டிருக்கும் அவரது 15 வயது மகனை கைது செய்து உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்திருக்கிறது. கேட்டால் தடுப்புக் காவல் – கைது என்கிறது.
மதுரை நகரின் ஒத்தக்கடை அருகே உள்ள தாமிரப்பட்டியைச் சேர்ந்த தோழர் முருகேசன், தாயாம்பட்டியைச் சேர்ந்த தோழர் சதீஷ் ஆகிய மக்கள் அதிகாரம் உறுப்பினர்களை நேற்று நள்ளிரவு கைது செய்திருக்கிறது. இருவரும் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் தோழர்கள். அவர்களை எங்கே வைத்திருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
தற்போது தென்மாவட்டங்களில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட தோழர்களின் எண்ணிக்கை முப்பதைத் தாண்டிவிட்டது.