ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடற்படை மாலுமியின் உடல் கண்டெடுப்பு

Forums Communities Fishermen ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடற்படை மாலுமியின் உடல் கண்டெடுப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3694

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜெகதாப்பட்டினத்திலிருந்து 5 கடல் மைல்கள் தொலைவில் 27 வயது இந்திய கப்பற்படையைச் சேர்ந்த மாலுமியின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. கப்பலிலிருந்து இவர் விழுந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

    ராம் பிரகாஷ் 2-ம் கிரேட் மாலுமி, இவர் ஐஎன்எஸ் கார் நிகோபார் கப்பலில் மாலுமியாக பணியில் ஈடுபட்டு வந்தார். தொண்டி மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட கடலோரப் பகுதியில் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியின்போது இவர் கப்பலிலிருந்து விழுந்துள்ளார்.

    கடலில் விழுந்த மாலுமியைத் தேடி கப்பற்படை கப்பல்களும் கடலோரக் காவல்படை கப்பல்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டன. நேற்று இரவுதான் கடலில் விழுந்த மாலுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடல் ஜெகதாப்பட்டினம் கடலோரப் பகுதியிலிருந்து 5 கடல் மைல்கள் தொலைவில் (கிலோ மீட்டரில் 9,260 தொலைவில்) கடலில் மிதந்துகொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இறுதிச் சடங்குக்காக மாலுமியின் உடல் சென்னைக்கு எடுத்துச்செல்லப்பட்டது

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This