மேட்டூர் அணையில் குறைந்த அளவே நீர் இருப்பதால் இந்த வருடமும் ஜூன் 12ஆம் தேதி, குறுவை சாகுபடிக்கு நீர் திறந்துவிட வாய்ப்பில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
இது ஏழாவது ஆண்டாக குறுவைக்கு நீர் திறந்துவிடப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள், குறிப்பாக கடைமடை பகுதி விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.