பதிவுத்துறையில் போலி ஆவணங்களையும் பதிவுகளையும் தடுக்க புதிய செயல்முறை

Forums Inmathi News பதிவுத்துறையில் போலி ஆவணங்களையும் பதிவுகளையும் தடுக்க புதிய செயல்முறை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #3614
  Nandha Kumaran
  Participant

  பதிவுத்துறை தலைவர், சொத்துக்களை பதிவு செய்யும் முன் செய்ய வேண்டிய முக்கிய சோதனைகளை பதிவுத்துறை அலுவலர்களுக்கு சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.

  அதில் கூறப்பட்டுள்ளதாவது: அசையாச் சொத்துகள் குறித்து பதிவுக்குத் தாக்கலாகும் ஆவணங்களில், போலி ஆவணப்பதிவுகளை தடுக்கும் நோக்கத்துடன் பார்வை 1 முதல் 3 வரையிலான சுற்றறிக்கைகளில் பதிவு அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

  பதிவுக்குத் தாக்கலாகும் கிரய ஆவணங்களில், சொத்தினை எழுதிக்கொடுப்பவருக்கு இதன் மீதான உரிமையை நிலை நிறுத்தும் வகையில் முன்பதிவு விவரம், பட்டா மற்றும் சொத்தினை அடையாளம் காணத்தக்க நான்கு எல்லைகள் தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றனவா என்பதையும் அவ்வாறு குறிப்பிடப்படும் விவரங்களை ‘A’ பதிவேடு மற்றும் வழிகாட்டிப் பதிவேட்டில் குறிப்பிட்ட சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண் ஆகிய விபரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்படவேண்டும் எனவும் இத்தகைய நடவடிக்கைக்கு பின்னரும் பதிவு அலுவலருக்கு, ஒரு குறிப்பிட்ட ஆவணத்தில் தெளிவற்ற நிலை இருந்தால், பதிவு விதி 27-ன்படி உரிய தணிக்கைக் குறிப்புடன் ஆவணம் திருப்பி அளிக்கப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பொது அதிகார ஆவணம் எழுதிப் பதிவுக்குத் தாக்கல் செய்யும் போது சொத்து எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பதை ஆவணத்தில் குறிப்பிட வேண்டும் என்றும் அதற்கான அசல் ஆவணங்களை சரிபார்க்கவேண்டும் என்றும் – அதன் தொடர்ச்சியாக பிறப்பிக்கப்பட்ட தெளிவுரைகளில், அசல் ஆவணம் தொலைந்துபோன வழக்குகள் மற்றும் வங்கிகளில் வைப்பீடு செய்யப்பட்ட நிகழ்வுகளில், காவல்துறையால் அளிக்கப்பட்ட சான்று மற்றும் வங்கியில் வைப்பீடு செய்யப்பட்டமைக்கான சான்று ஆகியவற்றை பரிசீலிக்கத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அசையாச் சொத்துகள் குறித்து பதிவுக்குத் தாக்கலாகும் விக்கிரயம், உரிமை மாற்றம், தானம், ஏற்பாடு (செட்டில்மெண்ட்) அடமானம் மற்றும் பொது அதிகாரம் வழங்கும் ஆவணங்களில் – தொடர்புடைய சொத்தின் மீதான – ஆவணதாரரது உரிமையை உறுதிசெய்யும் வகையில், சொத்தின் முன் பதிவு ஆவணம் மற்றும் பட்டா (பூர்விக சொத்தாக இருப்பின்) முதலிய வருவாய் பதிவுருக்களை, ஆவணதாரா¤டமிருந்து பதிவு அலுவலர்கள் வலியுறுத்திப் பெற்றுப் பரிசீலித்து – மன நிறைவு அடைந்த பின்னரே பதிவுக்கு ஏற்க வேண்டும் என பதிவு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This