மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனுக்கு விவசாய சங்க பிரதிநிதிகள் வீரவாளை பரிசாக அளித்தனர். கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்து காவிரி நீர் பற்றி பேசியதற்காக கமலுக்கு வீரவாள் பரிசு அளித்து வாழ்த்தினர். மேலும், தமிழக விவசாயிகளை காப்பாற்ற யார் வந்தாலும் அவர்களை வரவேற்போம் என அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த தவறும் இல்லை என விவசாய சங்க கூட்டமைப்பை சேர்ந்த தெய்வசிகாமணி கூறினார்.