முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடற்கரை வாழ் மக்கள் மேம்பாட்டுக்காக பல்வேறு அறிவிப்புகளை சட்டமந்றத்தில் வெளியிட்டுள்ளார். அதில் திண்டுக்கல்லில் மீன் தொழில் முனைவோர் பூங்கா அமைக்கபப்டும் என்று அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, தமிழ்நாட்டில் திலேப்பியா மீன் வளர்ப்பானது மிக லாபம் தரக்கூடிய ஓர் தொழிலாக தற்போது வளர்ந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, திண்டுக்கல் மாவட்ட, பாலாறு புரந்தலாறு அணையில் திலேப்பியா மீன் தொழில் முனைவோர் பூங்கா, 6 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.