விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள பெரவளூர் கிராமத்தைச் சேர்ந்த ப்ளஸ் டூ மாணவி பிரதீபா நீட் தேர்வில் வெற்றியடைய முடியததால் தன் மருத்துவர் கனவு கலைந்தது என மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி, அக்குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவதாக தெரிவித்தார். அப்போது, பிரதீபா தற்கொலை செய்துகொண்டது தனக்கு வேதனையளிப்பதாக முதல்வர் கூறினார்.
மேலும் பாதிப்படைந்த அக்குடும்பத்துக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் நிவாரணம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.
பிரதீபா ப்ளஸ் டூ தேர்வில் 1125/1200 மதிப்பெண் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.