சென்னையில் புதிய மீன்பிடி துறைமுகம் – முதல்வர் அறிவிப்பு

Forums Communities Fishermen சென்னையில் புதிய மீன்பிடி துறைமுகம் – முதல்வர் அறிவிப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3419

    மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அதன் மூலம் அவர்களின் வருவாயை பெருக்குவதற்கு பல திட்டங்களை 110 விதியின் கீழ் சட்டமனறத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி திருவள்ளூரில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
    மேலும், அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஆழ்கடல் மீன்களை கையாளுவதற்கு ஏற்ற தரமான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், சென்னை மீன்பிடி துறைமுகத்தில் தற்போதுள்ள இட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், ஒரு சூரை மீன்பிடி துறைமுகம் 200 கோடி ரூபாய் செலவில், திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் குப்பத்தில் அமைக்கப்படும். இந்த மீன்பிடி துறைமுகம், ஆழ்கடல் சூரை மீன்பிடிப் படகுகள் கொண்டு வரும் மீன்களை கையாளுவதற்கும், ஏலமிடுவதற்கும், ஏற்ற உலகத் தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் அமைக்கப்படும்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This