கன்னியாகுமரி கடற்கரையோர கிராமங்களில் தடுப்புச் சுவர் – எடப்பாடி அறிவிப்பு

Forums Communities Fishermen கன்னியாகுமரி கடற்கரையோர கிராமங்களில் தடுப்புச் சுவர் – எடப்பாடி அறிவிப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3418

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ், சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கன்னியாகுமரி  மாவட்டத்தில் மூன்று கடற்கரையோர கிராமங்களுக்கு புயல் தாக்கத்திலிருந்து பாதுகாக்க தடுப்புச் சுவர் கட்டித் தரப்படும் என்று அறிவித்துள்ளார்.

    மேலும் அந்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது,’கன்னியாகுமரி மாவட்டம் 72 கி.மீ நீளம் கடற்கரை கொண்ட மாவட்டம். ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு மீனவ கிராமத்தைக் கொண்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைத் தாக்கிய ஓகி புயல், மற்றும் சமீபத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் வள்ளவிளை, மார்த்தாண்டம்துறை மற்றும் நீரோடி கிராமங்களில் மீனவர்களின் வீடுகளும் உடைமகளும் பலத்த சேதம் அடைந்தன. எனவே அம்மீனவர்களின் இருப்பிடம் மற்றும் வாழ்வாதரங்களை ஆபத்தான அலைகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க்ககும் வகையில் மேற்படி மூன்று கிராமங்களுக்கும் மங்களுக்கும் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறைந்த நீளமுள்ள தூண்டில் சுவர்கள் அமைகப்படும்’ என கூறப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This