நீட் தேர்வில் தோல்வி எதிரொலி : விழுப்புரம் மாணவி தற்கொலை

Forums Inmathi News நீட் தேர்வில் தோல்வி எதிரொலி : விழுப்புரம் மாணவி தற்கொலை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #3375

  12ஆம் வகுப்புத் தேர்வில் 1125 மதிப்பெண் பெற்ற மாணவி, நீட் தேர்வின் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

  விழுப்புரம் மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த பெருவளூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சண்முகம் – அமுதா தம்பதியினரின் மகள் பிரதீபா.

  சிறுவயது முதலே மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்த பிரதீபா, பத்தாம் வகுப்பின் போது அரசு பள்ளியில் படித்து, பொதுத் தேர்வில் 495 மதிப்பெண் பெற்றார். அவரது மருத்தவப் படிப்பு கனவை உணர்ந்த பெற்றோர் வறுமையிலும், மேல்நிலைப் பள்ளிபடிப்பிற்காக தனியார் பள்ளியில் சேர்த்தனர்.

  மருத்தவர் ஆக வேண்டும் என்ற வட்சியத்தோடு படித்த பிரதீபா, 12ஆம் வகுப்பு தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றார். சிறுவயது முதலே படிப்பில் சிறந்த மாணவி நீட் தேர்வையும் வென்று, மருத்துவராகும் எண்ணத்தில் முயற்சியுடன் படித்துள்ளார்.

  கடந்த வருடம் நீட் தேர்வில் வென்ற அவருக்கு சித்தா மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் அதையும் தவிர்த்து, டாக்டர் ஆகும் கனவுடன் இந்த வருடமும் நீட் தேர்வை எழுதியுள்ளார்.

  ஆனால், 10ஆம் வகுப்பில் 495 மதிப்பெண்ணும், 12ஆம் வகுப்பில் 1125 மதிப்பெண்ணும் பெற்ற அந்த திறமை மாணவி, நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

  இதனால் மனமுடைந்த பிரதீபா, எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This