மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன், கர்னாடக முதல்வர் குமாரசாமியை இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்த இருவரும், காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வரை சந்திக்க வந்ததாக கூறிய அவர், அரசியல்வாதியாகவோ அல்லது நடிகராகவோ இல்லாமல், மாநில பிரச்சினைக் குறித்து பேசவே தான் வந்ததாக கூறினார். இரு மாநிலத்திற்கும் ஒரு இணைப்புப் பாலமாக இருக்கத் தயார் எனவும் அவர் கூறினார். சந்திப்பு குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறுகையில், இரு மாநிலங்களுக்கிடையே உறவு முக்கியம். அது போன்றே இரு மாநில விவசாய நலனும் மிக முக்கியமானது என கூறினார். மேலும், காலா திரைப்படப் பிரச்சினை குறித்தோ அல்லது வேறு எந்தவித விவகாரங்கள் குறித்தும் தாங்கள் பேசவில்லை என்றும் கூறினார்.