நான் சமூக விரோதிதான்- ரஜினிக்கு கமல் பதிலடி

Forums Communities Fishermen நான் சமூக விரோதிதான்- ரஜினிக்கு கமல் பதிலடி

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #3339

   

   

  தூத்துக்குடியில் போராட்டம் நடத்துபவர்கள் சமூக விரோதி என்றால், நானும் சமூக விரோதிதான் என ரஜினிக்கு கமல் பதிலடி கொடுத்துள்ளார்.

  சமீபத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கச்சென்ற நடிகர் ரஜினிகாந்த் போராட்டம் குறித்தும், போராட்டத்தில் வன்முறையாளர்கள் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டார்கள் என்றும், போராட்டம் போராட்டம் என்று நடத்தினால் தமிழகம் சுடுகாடாகிவிடும்’ என்று தெரிவித்தார்.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  இந்நிலையில், கர்நாடக முதல்-அமைச்சர் குமாரசாமியை சந்திப்பதற்காக இன்று பெங்களூரு புறப்பட்டுச்சென்றார் கமல்ஹாசன். சென்னையிலிருந்து பெங்களூரு புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  “தமிழகத்திற்கான தேவை குறித்து, குமாரசாமியிடம் பேச இருக்கிறேன். காலா பட பிரச்சினையை வியாபாரிகள் பார்த்துக் கொள்வார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் வன்முறையாளர்கள் ஊடுருவிட்டனர் என்ற ரஜினியின் கருத்தில் என்னைப்பொருத்தவரை அப்படி இல்லை., அப்படிப்பார்த்தால் நானும் வன்முறையாளன் தான். அது அவர் கருத்து, என் கருத்து வேறு.

  நான் காந்தியின் சீடன். போராட்டம் என்பது கத்தியும், வாளையும், துப்பாக்கியை கொண்டு நடத்துவது அல்ல. துப்பாக்கியே வந்தாலும் அதை திறந்த மார்புடன் எதிர்கொள்ளும் தன்மையை நாம் தூத்துக்குடியில் பார்த்தோம். அதை நான் நல்லதொரு பாதையாக பார்க்கிறேன். அதில் வன்முறை இருந்தது என்றால் அதை நாம் குறைத்துக்கொள்ள வேண்டும்.” போராட்டத்தை நிறுத்தக் கூடாது’’

  இவ்வாறு கமல் கூறினார்.

   

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This