வட தமிழ் நாட்டின் கடற்பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் சில நேரங்களில் 50 கிலோமீட்டர் வேகத்திலும் தென் மேற்காக வீசக் கூடும்.
தென் தமிழகத்தில், 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் தென் மேற்கிலிருந்து மேற்கு நோக்கி பலத்த காற்று வீசக் கூடும்.
குளச்சல் முதல் கீழக்கரை உள்ள பகுதிகளில் கடல் அலையானது 3 மீட்டர் முதல் 3.5 மீட்டர் வரை 5-06 -2018 வரை எழும்பக்கூடும்.
ஆகவே மீனவர்கள் மிகக் கவனமுடன், மீன் பிடிக்க செல்லும் படி எச்சரிக்கப்படுகிறார்கள்.