தூத்துக்குடியில் கடந்த 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த கலெக்டர் ஆபீஸ் முற்றுகை போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 வயது மாணவி ஸ்னோலினும் கொல்லப்பட்டார். அவரது உடல் மறு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.
புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியிலிருந்து வந்த டாக்டர் அம்பிகா தலைமையிலான டாக்டர்கள் நேற்று ஸ்னோலின் உடலை மறு பிரேத பரிசோதனை நடத்தி உடலை உறவினர்கள் கையில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு அஞ்சலி திருப்பலி அங்குள்ள சர்ச்சில் நடந்தது பின்னர் 12 மணிக்கு ஸ்னோலின் உடல் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.