தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு : மக்களுக்கு எச்சூரி ஆறுதல்

Forums Communities Fishermen தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு : மக்களுக்கு எச்சூரி ஆறுதல்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3304

    மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரி இன்று தூத்துக்குடியில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போன மக்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அவருடன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் மத்தியக்குழு உறுப்பினர் சம்பத் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த பிரச்சினையை தேசிய பிரச்சினையாக மார்க்ஸிஸ்ட் கட்சி எடுத்து செல்லும் எனவும், அரசு வேறு வழியில்லாமல் துப்பாக்கி சூடு நடந்ததாக நியாயம் கற்பிப்பதை ஏற்க முடியாது எனவும், பொறுப்பில் இருந்த கலெக்டர், மாவட்ட எஸ்.பி மற்றும் பிற போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

    வேதாந்த குழுமத்திலிருந்து, மத்தியில் ஆளும் பாஜகவும்,  காங்கிரஸ் கட்சியும் அதிக அளவில் நன்கொடை வாங்கியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This