துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டதாக பொய் புகார் தரச்சொல்லி வற்புறுத்தல் ?

Forums Communities Fishermen துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டதாக பொய் புகார் தரச்சொல்லி வற்புறுத்தல் ?

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3290

    ஸ்ரீ வைகுண்டம் வட்ட வழங்கல் அதிகாரியும் துணைத் தாசில்தாருமான கோபால் என்பவர் தான் போராட்டக்காரர்களைச் சுடுவதற்கு ஆணையிட்டதாகத் தன் பெயரில்  தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் பொய்யான எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தனக்கு மன உளைச்சல் தருவதாகவும் கூறியுள்ளார். இதை ஒட்டி வருவாய்த்துறை அலுவலர் சங்கம் இப்ப்டி மக்களைச் சுடச் சொல்லி ஆணையிட்டதாகப் பொய்ப் புகார்கள்  செய்யக் கட்டாயப்படுத்துவதைக் கண்டித்துள்ளது.

    துப்பாக்கிச் சூட்டிற்கு ஆணையிட்டதாக சேகர், கண்ணன் எனும் இரு துணைத் தாசில்தார்களும் சந்திரன் என்கிற கலால் துறை அதிகாரி ஒருவரும் தான் புகார் அளிக்கப்படுள்ளதாக உள்ளன. தெற்கு காவல் நிலையத்தில் சுட ஆணையிட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள எப்.ஐ.ஆர்ல் சுட ஆணையிட்டுள்ளதாகக் குறிப்பிடப் படுவது சௌ.சந்திரன் எனும் தூத்துக்குடி கோட்ட கலால் அலுவலர்.

    இப்போது தன் பெயரில் பொய் எப்.ஐ.ஆர்  பதிவு செய்ய முற்படுவதாக கோபால் எனும் துணைத் தாசில்தார் குற்றச்சாட்டு தெரிவித்து வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தினர் தாங்கள் இப்படி மக்களை சுட்டுக் கொல்ல ஆணையிட்டதாகப் பொய்ப் புகார்களை அளிக்கக் கட்டாயப்படுத்தப் படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

     

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This