- This topic has 1 reply, 2 voices, and was last updated 2 years, 7 months ago by
Balasundara Vinayagam.
-
AuthorPosts
-
June 2, 2018 at 8:04 pm #3246
Nandha Kumaran
Participantஇரும்புப் பெண் ஜெயலலிதாவாக உருமாறுகிறாரா ரஜினி ?
கம்யூனிச தத்துவத்தை உலகிற்கு ஈந்த காரல்மார்க்ஸ் வர்க்கப்போரில் நடுத்தர வர்க்கம் அழிந்தே போகும் என்று கணித்தார். ஆனால் அவரது ஆரூடம் பொய்த்தது. நடுத்தரவ
[See the full post at: இரும்புப் பெண் ஜெயலலிதாவாக உருமாறுகிறாரா ரஜினி ?]June 3, 2018 at 11:28 am #3302Balasundara Vinayagam
Participantஇது முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்கொண்டு வரும் கருத்துக் கட்டுரை. நடிகர் இன்னும் அரசியலுக்குள் நுழையவில்லை. நுழைய முதலில் தனக்கென்று ஒரு கட்சி, அல்லது இன்னொரு கட்சியோடு இணைத்தல் செய்யவில்லை. பின்னர்தான் அவர் கூறும் கருத்துக்கள் என்ன செய்யுமென கணிக்கலாம். அப்படியே பின்னர் வருவதற்கு தூத்துக்குடி பேச்சை எடுத்துக்கொண்டு கணிக்கலாமென்றால், 2019 தேர்தல் வருவதற்கு முன் கட்சியைத் தொடங்கி பின்னர் தன் கொள்கைகளை வகைப்படுத்தும்போது, இதே ”நடுத்தரவர்க்கத்துக்குப் போடும் அல்வா” அப்போதும் போடுவார் என்பது என்ன நிச்சயம்? 50 விகித இடஒதுக்கீடு 69 ஆகவில்லையா? நடுத்தரவர்க்கததை மதிப்பேன் என்ற நடிகர் ஒரேயடியாக 69 என்று ஆக்கி நடுத்தரவர்க்கத்தினரிடமிருந்து ஓடினாரே? டெஸ்டிங் வாட்டர்ஸ் என்பார்கள் ஆங்கிலத்தில். அப்போது பல எதிர்மறைகள் மோதும். அதில் சிலபல, இப்போது போடும் அல்வாவோடும் மோதும். அப்போதுதான் தெரியும் என்ன சொல்வார்? எதை எடுப்பார்? விடுவார்? என்பது. கட்டுரையாளார் சொல்வது போல பி ஜே பியுடன் ஒரு தூரத்தைக் கடைபிடிக்கிறார் என்றால், எப்போதும் அத்தூரம் நிலைக்குமா? 2019ல் அது வெகு தூரமாகும் போது இந்த அல்வாவை மேலும் நடுத்தரவர்க்கத்துக்கு இனிப்பாக்க வேண்டுமா? என்று ஏகப்பட்ட கேள்விகள் nadikarukku காத்திருக்கின்றன். எனவே தூத்துக்குடியில் பேசியது தற்போது நிலையான ஒன்று என எடுக்க முடியாது.
ஜயலலிதாவோடு ஒப்பிடுகிறார். ஜயலலிதாவுக்கு இருந்தது வன்மம். அது அவர் எம் ஜீ ஆரோடு கொ ப சா வாக இருக்கும்போது இல்லை. எம் ஜி ஆர் போனபோது கருநாநிதியோடு மோத வேண்டிய நிலையில் – ஜாதிக்குறிப்புகள் என்ற அம்புகளாலும், பிற தனிநபர் தாக்குதாலாலும் – மேலெழந்து வனமத்தீயாக கொழுந்துவிட்டது. பாசிட்டிவாகப் பார்தால், தனிநபர் உணர்வுகளே அவரின் கடுமையான குணத்துக்குக் காரணம். இரசனிக்கு அப்படி ஏதாவது காரணங்கள் இருக்கா? மராட்டியர் என்ற விமர்சனம் வெகுதூரம் போகாது நடிகரல்லவா? எனவே இனி அப்படி அவருக்கு ஒரு வனமத்தீ உருவாகினால், இவருக்கும் இரும்புக்கரம் வரும். தூத்துக்குடியில் ஒரு இளைஞர் ”நீங்க யார்” என்ற் கேள்வி அதை இவருக்குச் செய்ய, சென்னை விமானநிலையத்தில் க்ண்டோம்.
இப்போது பேசிய பேச்சு முன்பே உருவாக்கப்பட்டதை நம்பாவிட்டால் நாம் அரசியல் பார்வையில் அப்பாவிகள். பி ஜே பி அருகில் வராவிட்டாலும், இந்துதவ தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த சம்பத், புதியதாக உருவாக்கிக்கொண்டிருக்கும் மாரிதாஸ், மற்றும் பலர் (அதே கொளகையைக்கொண்டோர்) நேராகவும் மறைமுகமாகவும் இரசினியோடு பேசியிருக்கின்றனர். ஜயலலிதாவுக்கு சோ இராமசாமி மாதிரி, இவருக்கு குருமூர்த்தி எனபது தெரிந்ததே.
பி ஜே பியிடமிருந்து விலகியது போல பாவ்லா காட்டி நம்பவைக்கலாம். கொள்கைகளிலிருந்து விலகியமாதிரி எப்படி காட்ட முடியும்?
எனினும் இக்கொள்கைகள் இவருக்கு அரசியல் சோறு போடுமா? என்பதை நேரடியாக அனுபவிக்கும்போது இரசினி பேசுவதையும் செய்வதையும் வைத்து நாம் கணிக்கவேண்டும்.
-
AuthorPosts
- You must be logged in to reply to this topic.