கட்டாயக் கல்விச் சட்டத்தில் தனியார் பள்ளிகளில் தரப்படும் கல்வியை தமிழக அரசு ஊக்கப்படுத்தவில்லை என்று ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கட்டாயக் கல்விச் சட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து பேரவையில் விளக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.