சட்டமன்றத்தில் மீன்வளத்துறை மானிய கோரிக்கை தொடர்பான விவாதத்தில் விளக்கமளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மீனவர்கள் இறந்தாலோ அல்லது காணாமல் போனாலோ இதுவரை வழங்கப்பட்டு வந்த ஒரு லட்சம் ரூபாய் இரண்டு லட்சமாக உயர்த்தப்படுவதாகவும், கை மற்றும் கால்கள் இழந்தால் வழங்கப்பட்டு வந்த 50000 ரூபாயை ஒரு லட்சம் ரூபாயாகவும் , இதர காயங்கள் ஏற்பட்டால் வழங்கப்படும் ரூ.20000 , 50000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.